காட்சி (scene)குடும்பநல நீதிமன்றத்தில்(family court) இருந்து ஆரம்பமாகிறது⚖️,உள்ள ஒரு வழக்கின் விசாரணை நடந்துகிட்டிருக்கிறது. யாருனு உள்ளப் போய் பார்த்தா ஒரு பக்கத்தில் நமது கதையின் நாயகன் ஆதித்தியா தான். அவருக்கு மறு புறத்தில் நிற்பது நமது கதையின் நாயகி பார்வதி.
நீதிபதி👩🏼⚖️-உங்க முடிவுல ஏதாவது மாற்றம் இருக்கிறதா?
ஆதி - இல்லை.... அதை சொல்லும்போது அவர் முகத்தில் எந்த ஒரு வருத்தமும் தெரியவில்லை. உருதியான முடிவுனு அவரோட அந்த பதில்களே தெரியுது😑.
பார்வதி - இல்லை.... ஆனால் அவளுடைய குரல வருத்தமும் வலியும் சேர்ந்து தெரியுது 🥺..... ஆனா அவ கண்ணில் கண்ணீர் வரல,அவ அங்க ஒரு பொம்மைப் போல்தான் நின்று கொண்டு இருக்கிறாள்⛄.
நீதிபதி👩🏼⚖️ - ம்ம்ம்ம்ம்... இரண்டு பேரோட முடிவில் எந்த மாற்றம் இல்லைன்னாலும், இந்த நீதிமன்றம் உங்களுக்கு மூன்று மாதம் அவகாசம் (Time) தருகிறது. அப்பவும் நீங்க அதே முடிவில் உறுதியாக இருந்தீங்கனா இந்த நீதிமன்றம் உங்களுக்கு விவாகரத்து வழங்கும்💔.
( ஷியாம்,சிந்து,மாயா அவங்ககிட்டப் போறாங்க)
ஷியாம் - என்னடா இது சீக்கிரம் எல்லாம் முடிஞ்சிடும்னு பார்த்தா மூன்று மாதம் அவகாசம் கொடுத்திறுக்காங்க 😒.
ஆதி - விடு டா வெறும் மூன்று மாதம் தான் அதற்குல்ல எதுவும் மாறப் போறதில்லை... மாயா நம்ம இவ்வளவு நாள் காத்திருந்தோம்ல.... வெறும் மூன்று மாதம் தான்...... நம்ம அப்போ கல்யாணம் செய்து கொள்ளலாம் 👩❤️👨.
மாயா - சரி ஆதினு கொஞ்சம் மந்தமாச் சொல்றா 😔.
ஆதி - ஏய்! ஏன் இப்ப இவ்வளவு சோகமா பேசுற... என்மேல் நம்பிக்கை இல்லையா? இந்த மூன்று மாதத்தில் எதுவும் மாறாது🙅🏻♂️..... மாயா சிரிக்கிறாள்😁.
ஷியாம் மற்றும் சிந்து - சரி இந்த 3 மாசத்தில் எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிடுவோம்..... விவாகரத்து கிடைத்ததும் கல்யாணத்த ஜாம் ஜாம்னு பண்ணிடலாம்...... ஆதியும் மாயாவும் சிரிக்கிறாங்க😃.
(இது எல்லாத்தையும் பார்வதியும் வழக்கறிஞரும் கேட்டுட்டு இருக்காங்க👂🏻. ஆதியோட சிரிப்பு பாருக்கு வலித்தாலும்😓 அவர் சந்தோஷமா இருந்தா போதும்னு நினைச்சிட்டு சிரிச்சிட்டு அங்க இருந்து கிளம்பிப் போறா🚶🏻♀️).
( எல்லோரும் சாப்பிட உட்கராங்க பாருவ தவிர..)
அகிலா இத கவனித்து - ஐஷு பாரு எங்க?
ஐஷு - இன்னும் வரல ஆன்டி.
புருஷ் - என்னது இன்னும் வரவில்லையா? ஏன் இத என்கிட்ட முன்னாடியே சொல்லலை?
ஐஷு - அங்கிள் அவ வருவாரு நான் காத்திருந்தேன்.. அதான் சொல்லலை.. பிறகு அவளது தொலைபேசி க்கு அழைத்து பார்த்தா இணைப்பு துண்டிக்கப்பட்டதுனு(switch off) வருது📞.
அகிலா - என்னது தண்டிக்கப்பட்டு இருக்கா? ஏமா இத முன்னாடியே சொல்லலை?... ஏங்க எனக்கு பயமா இருக்குங்க😱.
சிந்து - மா.. ஏன் இப்ப இப்படி துடிக்குறீங்க? உங்களுக்கு வேண்டியவங்க எல்லாரும் இங்க தான் இருக்காங்க..... எங்க இருந்தோ வந்த யாரோ ஒருத்திகாக எதுக்கு இப்போ இவ்வளவு பதட்டம் ஆகுறீங்க😏 எங்கையாவது போயிருப்பா வந்திடுவா.. நிம்மதியா சாப்பிட்டு போய் தூங்குங்க😴.
அகிலா - என்ன சொன்ன நீ? அவ எவளோ ஒருத்தியானு ஏதோ சொல்ல வர...
புருஷ் அவங்கள நிறுத்தி - அகிலா போதும்... இவர்களைப் பேசி ஒரு நன்மையும் இல்லை.... வா நம்ம போய் அவளை தேடுவோம்😔.
அகிலா தலை ஆட்டிட்டு சாப்பிடாம கலங்கின கண்களோட எழுந்து போறாங்க
ஆதி - மா, பா எதுக்கு இப்போ சாப்பிடாம எழுந்து போறீங்க? வந்து சாப்பிடுங்க🍛.
புருஷ் - அவளைவிட சாப்பாடு எங்களுக்கு முக்கியம் இல்லை ஆதினு சொல்லிட்டு போறாங்க.... அருணும் ஐஷுவும் பின்னாடியே எழுந்து போறாங்க🚶🏻♀️🚶🏼♂️
(ஆதிக்கு கோவம் வந்து சாப்பிடாம எழுந்து போறார்....பாரு மேல் ஆதி செமக் கோவத்தில இருக்கிறார்😡😡.)
(அகிலா,புருஷ், அருண்,ஐஷு எல்லோரும் பாருவை வெவ்வேறு திசைகளில் தேடுகிறார்கள்.... ஆனால் பாரு கிடைத்தப்பாடு இல்லை.. ஆகவே அவர்கள் நால்வரும் விட்டிற்கு வந்து பதட்டத்துடன் ஹாலில் அமர்ந்திருக்கிறார்கள்.. 🏬🛋️. இப்படியே பின்னிரவு( late night)🥱பார்வதியும் வீட்டிற்குள் வருகிறாள்..... ஆதி தான் அவளை முதலில் பார்க்கிறார்👀பார்த்துவிட்டு சென்று அவளை இழுத்து ஒரு அறைக் கொடுக்கிறார்... எல்லோரும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தால் பார்வதி அங்கு கன்னத்தில் கை வைத்துக் கொண்டு நின்று கொண்டு இருக்கிறாள்.. ஆனால் அவள் கண்களில் நீர் வழியவில்லை.... அகிலாவும் புருஷும் ஓடி சென்று அவளை அணைத்து கொண்டனர்.... ஆனால் அவள் எந்த வித உணர்ச்சிகளும் இல்லாமல் நின்று கொண்டிருந்தாள்...)
அகிலா அவளின் நிலையை புரிந்துக்கொண்டு - உள்ள வா மா என்று அழைக்கிறாங்க...🗣️(பாருவும் எதுவும் பேசாம உள்ள போக போறாள்🤐🚶🏻♀️).
ஆதி கோவமா😡 - எங்க போற?
அகிலா - ஆதி!!!!!!
ஆதி நிறுத்தி - உன்கிட்ட தான் கேக்குறேன்..... எங்க போற? (பாரு எதுவும் பேசல🤐🤐).
புருஷ் - ஆதி!!!!! நீ உள்ள போ...🚶🏼♂️.
ஆதி - முடியாது பா!!!..இவளால தான் நீங்க சாப்பிடாம பதட்டமா இருந்தீங்க... ஆனா இவ தாமதமாக வந்ததும் இல்லாமல் கேட்கிற கேள்விகளுக்கும் பதில் சொல்லாம போக போறாள்... இனிமேலும் இவளை இங்க தங்க வைக்க இயலாது..இவள் இஷ்டத்துக்கு வாழனும்னா வீட்டிற்கு வெளியே தான் வாழனும்😤
அகிலா - ஆதி.... நீ கொஞ்ச நேரம் பேசாம இரு🤫.
சிந்து - எதுக்கு மா அண்ணன தடுக்கிற?அண்ணன் சொன்னது உண்மை தானே... இவ இந்த விட்டிற்கு வந்ததில் இருந்து இந்த வீட்டோட நிம்மதியே போச்சு😖... ஏன் இன்னும் சொல்ல போனா உங்களுக்கு எங்களை விட இவ தான் முக்கியம்😏 இனிமேலும் இவளை இங்க தங்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை.
அருண் - சிந்து என்னடி இப்படி பேசுற.. அண்ணி என்ன பன்னாங்கனு நீ இப்படி எல்லாம் பேசி அவங்க மனச காயபடுத்தற😠.
ஷியாம் - அதானே அருண் உண்மை... இன்னும் இவளை உள்ளே விட்டா இங்க இருக்கிற எல்லாரும் தனித்தனியா பிரிஞ்சி போக வேண்டியது தான்... இவ பாவமா நடிச்சு நம்ம எல்லோரையும் ஏமாத்திட்டு இருக்காள்... இது புரிஞ்சதால தான் நாங்க அவ பக்கம் நிக்காம இருக்கோம்... உங்களுக்கு பட்டா தான் புத்தி வரும் போல😤.
புருஷ் - போதும் நிறுத்துங்க!!!! யார் என்ன சொன்னாலும் அவ இங்க தான் இருப்பாள்... இதில் எந்த மாற்றமும் இல்லை.... ஐஷு...... அவளை உள்ளே கூட்டிட்டு போ😎. (பாருவும் பொம்மை மாதிரி ஐஷு கூட போகிறாள்)(ஆதி,ஷியாம்,சிந்து,மாயா, கோவமா மேல் ஏறி போறாங்க😠😡).
அகிலா - பாருவ பார்த்தா எனக்கு பயமா இருக்குங்க.... ஏன் அவளுக்கு மட்டும் இப்படி நடக்குது... இவங்களை சேர்த்து வைக்கலாம்னு பார்த்தா 👩❤️👨👀 இந்த மாயாவால தான் விரிசல் அதிகமாகிட்டே போகுது.... இப்போ என்ன செய்யறது?
புருஷ் - யோசிக்கலாம் அகிலா.... நீ வா பாரு கிட்ட போகலாம்🚶🏻♀️🚶🏼♂️.
(ஆதியின் அறையில்....ஆதி கோவமா மலர் குவளையை(flower vase)🪦 எடுத்து உடைக்கிறார்).
ஆதி கோவமாக - யாரு டா இவள்?எதற்காக அப்பாவும் அம்மாவும் இவளுக்கு இப்படி ஆதரவு கொடுக்கிறார் கள்?அவளுக்காக துடிக்கிறார்கள்? நம் மீது கோபம் கொள்கிறார்கள்?🤨யார் அவ?
மாயா - ஆதி எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு🤔🤔அவளை பற்றி அவங்க எதுவும் சொல்லவில்லை.. இதைப்போல் அவ விஷியம் வந்தா அவங்க அதிகமா பதட்டமும் கோவமும் அடைகிறாங்க... அவள் ரொம்ப முக்கியம்னு சொல்றாங்க..... அவளுடைய குடும்பத்தை கூட நீங்க யாரும் பார்த்ததில்லை தானே சொன்னீங்க... அப்போதாவது அவள் உங்க பெற்றோர்களை எதாவது சொல்லி அவளுடைய சூழ்ச்சி வலையில் சிக்க வைத்திருந்தா🤔?
ஆதி,ஷியாம்,சிந்து மாயா கூறுவதை ரொம்ப தீவிரமாக யோசிக்கிறாங்க😳😱🤔😲.
தொடரும்.......