ஒரு அறையில் ஒருத்தர் அதிகமாக குடிச்சிட்டிருக்க காட்சி ஆரம்பிக்கிறது. ஒருத்தர் வந்து அந்த நபரை தடுத்து : இன்னைக்கு இது போதும் டா...
அந்த நபர்: இன்னும் ஒன்னு டா...
இன்னொருவர்:வேண்டாம்.... ஏற்கனவே ரொம்ப அதிகமா குடிச்சிட்ட....இதுக்கு மேல அனுமதிக்க முடியது....சொல்லிட்டு வேலையாட்களை கூப்பிட்டு பாட்டில்களை எடுத்துட்டு போக சொல்றாங்க.
அந்த நபர்: அடுத்து புகை பிடிக்க ஆரம்பிச்ணசுட்டாங்க...
மற்றவர் : டேய்ய்ய்.... போதும்னு சொன்னா... நீ என்னடா பண்றா?
அந்த நபர் : சரக்கு தானே நீ நிறுத்த சொன்னே... புகைபிடிக்க கூடாதுன்னு சொல்லலையே...
இன்னொருவர் : அப்பா... சாமி... ரெண்டையும் தா நா சொன்னே... ஏன் டா கார்த்தி நீ இப்படி இருக்கா?
ஆம் அது நம் கதையின் நாயகன் கார்த்திக் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் ஷாம் தான்.
கார்த்தி : நா நல்லா தானே இருக்கா? அப்றம் என்னானு குடிச்சிட்டு பேசுறவங்களோட பாஷை தா பேசுறாங்க.
ஷ்யாம் : அது இல்லடா.... நீ எதுக்கு இப்டி சரக்கு சாப்புரது, புகை பிடிப்பது, ஊர் சுற்றுவதுனு உன் வாழ்கை ஆ நாசம் பண்ணிட்டிருக்கா? உனக்கு ஒரு துணை வந்தா....
கார்த்தி : ஹாஹாஹா... துணை வந்தா.... ஏன் டா மீதி சொல்லல.... துணைக்கு ஒருத்தி வந்தாலே... எங்க அவ? இத சொல்லும் போது அவர் கண்கலங்குது. என் வாழ்கை ஆ மாத்தி என் சந்தோஷத்தை பறிச்சிட்டு போயிட்டாங்க லே.... நா இப்படி இருந்தா? உன மாறி டீசண்ட் ஆ தானே இருந்தா.... ஆனா கடைசியில் என்னாச்சி? அவா என்ன சொன்னா கடைசியா நீயும் தான் கேட்ட ல.... அவள நா எவளோ காதலிச்சா.... ஆனா அதுக்கு பரிச கொடுத்துட்டு போனது வலிய மட்டும் தானே.... அந்த வலிய மறக்கணும் னு குடிக்க ஆரம்பிச்சா... அப்றம் தா எதுக்கு இவளோ நல்லவன வாழ்ந்து இந்த உலகத்தில் இவளோ சந்தோஷத்தையும் நா ரசிகமா விடுறேன்னு தோனுச்சி.... இப்ப நா இந்த வாழ்க்கை ல சந்தோஷமா இருக்கேன் டா... நான் என் வாழ்க்கையை கொண்டாடுறேன்.... நீயும் வேணா ஜாயின் பண்ணிக்கோ டா.... சொல்லிட்டு சிரிக்குறாங்க. அவர் உதடு சிரிச்சாலும் கண்ணில் வலி ய பாக்க முடியுது...
ஷ்யாம் : நா இல்ல பா... நீ இப்படியே இரு.... தினமும் இதே டயலாக் கேட்டு எனக்கே போரடிச்சிரிச்சி....
கார்த்தி : தினமும் நீ இது தானே டா கேக்குறா.... அப்றம் இத பாத்தில் சொல்லாம வேற என்ன பாத்தில் சொல்லனு? அப்டியே மல்லாக்க படுத்து ஆஃப் ஆயிட்டா...
ஷ்யாம் அவரா தாங்கி புடிச்சு படுக்கைல படுக்க வச்சு கதவை தாழ் போட்டு போறாங்க
அடுத்த நாள் காலை, கார்த்தி எழுந்து ஃப்ரெஷ் ஆகி ரெடி ஆகி வெளிய போக கிளம்புறாங்க. அவர் கீழ வரும்போது எல்லாரும் டைனிங் டேபிள்ல உக்காந்திருக்காங்க.
சிந்து : அண்ணா... வந்து சாப்டு போங்க...
கார்த்திய அம்மாவும் அப்பாவும் பக்காவே இல்ல... விவாகரத்துக்கு அப்றம் கார்த்தி கிட்ட அவரோட பெற்றோர் பேசுறதில்ல. சிந்து மட்டும் தா பேசுவா. கார்த்திக்கு அது வலியை குடுக்குது இருந்தாலும் இப்போ பழகிடுச்சி.
கார்த்தி : வேணா குட்டி மா (குட்டி மா னு தா சிந்துவா கார்த்தி கூப்டுவாங்க)... நீங்க சாப்டுங்க... ஷ்யாம்(ஷாம்)... நா வெளியா வெயிட் பண்றேன்... நீ சாப்டு வா...
ஷ்யாம்(ஷாம்) : டேய்யி சாப்டு போலாம் டா... வா வந்து உக்காரு...
அதே நேரம், ஒரு குரல் உள்ளே வரலாமா?
எல்லாரும் திரும்பி வாசல் பாக்குறாங்க.
சிந்து மகிழ்ச்சி ஆ : நீனா.... வாடி... என இது அனுமதி எல்லாம் கேக்குரா... உள்ள வர வேண்டியது தானே...
நீனா புன்னகைக்க. கார்த்தி நீனாவ வச்சா கண்ணு வாங்காம பாத்திருக்காங்க. நீனா அடிக்கடி அவர ஓர கண்ணால பாக்குறாங்க. இத ரெண்டும் யாருமே நோட் பண்ணல.கிஷோர் : வா மா... இப்ப எல்லாம் இந்த பக்கமே ஆள காணோம்... ஓரே பிஸி ஆ...
லக்ஷ்மி : நானும் சிந்துகிட்ட எப்பவும் கேப்ப... ஏன் நீனா இப்போல எல்லாம் வராதே இல்ல னு...
நீனா : அது மாமா... அத்தை... படிப்பு முடிஞ்சாதும் ஊருக்கு போயிட்டேன்.... அப்றம் இப்போ ஒரு சின்ன வேலை கெடச்சிருக்கு அதா இங்க வந்தா.... அப்டியே பாத்துட்டு போலாம் னு... கார்த்தியா பாத்துட்டு சொல்றாங்க. இத கார்த்தி கவனிக்கிறார்.
லக்ஷ்மி : சாரி மா.... வா... வந்து உக்கார்ந்து சாப்டு....
நீனா : வேணா மா... நீங்க சாப்டுங்க... நா சாப்டு தா வந்தே...
கிஷோர் : ஓகே மா...னு எல்லாரும் சாப்பிடராங்க.
கார்த்தி வெளிய போறாங்க.
நீனா : சிந்து... நீ சாப்டு வாங்க நா கார்டன் ல இருக்குற...
சிந்து : சரி டி....
நீனாவும் வெளிய தோட்டத்துக்கு போற. திடீர்னு ஒரு கை அவளா இழுக்குது. நீனா பயந்து கத்த போகும் போது அந்த ஆள் கண்ணா பாத்து உறைஞ்சி ஆகுது.. ஆமாம் கார்த்தி தான்...
கார்த்தி : ஓய்ஐய்... என ரொம்ப நாளா இல்லை காணோம்...
நீனா : அதான் உள்ள சொன்னேனே ஊருக்கு போயிட்டேன் னு...
கார்த்தி : ஊருக்கு போறதுக்கு முன்னாடி எனக்கு கொடுத்த வாக்குறுதி நினைவு இருக்க? னு புரிவத உயர்தி கேக்குரங்க.
நீனா தலையாட்டுறாங்க.
கார்த்தி : அப்டினா எப்போ போலாம் சொல்லு....
நீனா : அது.... 2 நாட்கள் ட்ரிப் வீக்கெண்ட் ல போலாம்...
கார்த்தி : அவளோ நாள் காத்திருக்கனுமா...
நீனா: ஆமா இன்னும் 4 நாட்கள் தானே...
கார்த்தி : இல்ல... இல்ல... இப்பவே நீ என்ன ரொம்ப காக்கா வச்சுட்டேன்... இனிமே அனுமதிக்க மாட்ட... இன்னிக்கே போலாம்... நான் எல்லாத்தையும் ஏற்பாடு பண்றேன்...
நீனா : ஆஹான்.. அதெல்லாம் முடியாது.... எனக்கு வேலை இருக்கு... வார இறுதியில் மட்டும் தா லீவ்... இப்ப நா வந்துட்டேன்னு உனக்கு தெரிய வைக தா கலையிலே இங்க வந்தே...
கார்த்தி : ஆமா.... கேக்கணும் நினைச்சா... நேத்து பேசுனப்போ கூட நீ இப்ப வரமாட்டேன்னு தானே சொன்னா....
நீனா : அது சும்மா உங்ககிட்ட பொய் சொன்னா...
கார்த்தி : ஐ.... அப்போ இந்த பொய்க்கும் சேர்த்து தண்டனை உண்டு...
நீனா : சரிங்க சார்.... பண்ணிட்டா போச்சு.... அதுக்கு முன்னாடி என்ன கொஞ்சம் விடுதால பண்றிங்களா சார்...
கார்த்தி : அப்டி எல்லாம் விட முடியாது... நா சொன்னதுக்கு ஒத்துக்கிட்ட இப்போவே விடுறேன்...
நீனா : ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க.... எனக்கு ஆபீஸ் போணும்...
கார்த்தி : சரி போ... உனக்கு என்ன விட உன் ஆபிஸ் தானே முக்கியம் அவள விட்டுட்டு கொஞ்சம் கோச்சிக்குட்ட மாறி சோர்வா முகத்தை வச்சுகிட்டு திரும்ப நிக்குறாங்க.
நீனா இத பார்த்து ஏதோ யோசிச்சி : எனக்கு நீங்க தா முக்கியம்... ஆனா வேலை இல்லாம இங்க நிக்க முடியாது... அப்டினா இன்னென்னு பண்ணலாமா?
கார்த்தி :என்னானு சீரியஸ் ஆ மூஞ்சிய வச்சுகிட்டு கேக்குறாங்க.
நீனா : இன்னிக்கு இரவு என்ன கடற்கரை கூட்டிட்டு போறீங்களா? வார இறுதியில் பயணம் போல...
கார்த்தி உடனே திரும்பி பாத்து ஸ்மைல் பண்ணிகிட்டு : டபுள் ஓகே... நைட் ரெடி ஆ இரு... நா பிக்கப் பண்ணிக்கறேன்...
நீனா : சரி....
கார்த்தி : ஹான்... அப்றம் உன்னோட அந்த வெள்ளை சட்டையும் சிவப்பு பாவாடையும் இருக்குல அது போடு...
நீனா : ம்ம்... சரி... ஹான்... ஒரு நிமிஷம் சொல்லிட்டு அவ பேக்ல இருந்து ஒரு லஞ்ச் பாக்ஸ் ஆ எடுத்து கொடுக்குறாங்க.
கார்த்தி : என்ன இது?
நீனா : திறந்து பாரு...
கார்த்தி ஓபன் திறந்து பாத்தா அவருக்கு புடிச்ச ஆப்பம் தேங்காய் பால் இருக்கு...
நீனா : இது உங்களுக்கு என் ஸ்பெஷல்... ப்ரேக்ஃபாஸ்ட் எதுவும் சாப்டலா ல... இந்த சாப்டு சொல்ல கார்த்தி கைல போன், கீ எல்லாம் இருக்குறதால எப்டினு யோசிக்குறாங்க. ஆத பாத்து அவளே ஊட்டி விடுறாங்க. கார்த்திக்கு அது ரொம்ப ஃபீல் ஆகுது... அவர் கண்கலங்குது.
நீனா : சபட் ல கரம் எதுவும் போடலயே... அப்றம் ஏன் இப்ப கண்ணில தண்ணி வந்திருக்கு?
கார்த்தி எதுவும் பேசல. நீனா முழுசா ஊட்டி விட்டு கை வாஷ் பண்ண போறாங்க. திடீர்னு திரும்பி வந்து அவர் கண்ண இடது கையால தொடைச்சு விட்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டு ஓடுற. கார்த்தி வெட்கம் கொள்கிறார்.
ஷ்யாம், சிந்து வெளிய வரதுக்கு முன்னாடி கார்த்தி கார்கிட்ட போய் வெயிட் பண்ற மாறி நிக்குறார். நீனா தோட்டத்தில் பெஞ்ச் ல உக்கார்ந்திருக்க...
ஷ்யாம் வரவும் கார்த்தி ஷ்யாம் போறாங்க. நீனா சிந்து கூட கொஞ்சம் நேரம் பேசிட்டு ஆபிஸ் கு கெளம்புறாங்க.
அன்று இரவு, கார்த்தி நீனாவுக்கு கால் பண்றார். நீனா கால் அட்டென்ட் பண்ணி பேசுறாங்க.
நீனா : ஹலோ....
கார்த்தி : ரெடியா?
நீனா : ஆமா... எப்போ வருவீங்க?
கார்த்தி : இன்னும் 15 நிமிஸத்துல வரேன்...
நீனா: சரி...
கால் கட்பன்னிடாங்க.
கார்த்தி கிளம்பும் போது கரெக்ட் ஆ ஷ்யாம் உள்ள வராங்க.
ஷ்யாம் : என்னடா அதிசயமா இருக்கு... சாதாரணமாக இந்த நேரத்தில் நீ செம்ம போதாய் ல இருப்பாங்கலே... இன்னைக்கு என்னடா நா எங்கயோ போக தயாராகி இருக்குற மாறி தெரியுது...
கார்த்தி : ஆமா மச்சா... நா கொஞ்சம் வெளியா போறேன்... வர மார்னிங் ஆகும்...
ஷ்யாம் : எங்க டா போறா? அதுவும் காலையில வரை அளவுக்கு...
கார்த்தி : அதெல்லாம் உனக்கு எதுக்கு?
ஷ்யாம் : சும்மா... ஒரு பொது அறிவுக்கு தா...
கார்த்தி நக்கலாக சிரிச்சுகிட்டு பக்கத்தில் வரும் போது ஷ்யாம் : டேய் உண்மைய சொல்லு டா... நீ எதுவது பொண்ணு கூட வெளியா போறியா?
கார்த்தி சிரிச்சுகிட்டு : எப்படி மச்சா சரியா ஆ கண்டு புடிச்சே? பயங்கறமான ஆளு தான் டா நீ...
ஷ்யாம் : என்னடா நக்கலா....
கார்த்தி : இல்ல மச்சா...உன்மைலே நா ஒரு பொண்ணு கூட வெளியா போறேன்....நிறையா பொண்ணுங்களா ஊர்சுற்றிருக்கோம்...ஆனா ஒருத்தி கூடையும் இந்த அளவுக்கு போணும்னு தோணால...ஆனா இந்த பொண்ணுகிட்ட மட்டும் என்னமோ அவகூட....உனக்கு புரிஞ்சிதுல. ..
ஷ்யாம் : என்னது நீ அந்த பொண்ணு கூட அதுக்கு தா போறியா? நீயாடா இப்பிடி எல்லாம் பேசுறா?
கார்த்தி : என்னாலயும் நம்ப முடியல டா... எல்லா பொண்ணுங்க கிட்டயும் சாட்டிங், கால்லிங் னு விட்டுடுவே... ஆனா இந்த பொண்ணுகிட்ட மட்டும் இந்த மாறி ஒரு ஆசை... அவகிட்ட நா கேட்டே.... அவளும் ஒத்துகிட்டாங்க.... நா கேட்டது 2 நாள் ட்ரிப்க்கு தா... ஆனா அதுக்கு முன்னாடியே இப்படி ஒரு வாய்ப்பு அமைஞ்சிரிச்...
ஷ்யாம் : என்னடா இவளோ சதாரணமா சொல்றா? அந்த பொண்ணு எப்டினு கூட தெரியமா நீ எப்டி டா?
கார்த்தி : அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு டா.... எனக்கு பர்சனலா தெரிஞ்சா பொண்ணு தா... அதனால் நீ பயப்படாத.... சரியா...
ஷ்யாம் : யாரு டா அந்த பொண்ணு? உனக்கு தெரியும் நா எனக்கும் தெரிஞ்சிருக்கனுமே...
கார்த்தி : உனக்கும் அந்த பொண்ண நல்லா தெரியும்... அதனால நா அது யாருனு சொல்லமாட்டேன்...
ஷ்யாம் ஏதோ கேக்க வர.
கார்த்தி : டேய்... எருமா... போதும் கேள்வி கேட்டது... எக்ஸாம் கே இவளோ கேள்விகளுக்கு பதில் பண்ணதில்ல... எனக்கு நேரமாச்சு... அவ காத்துனு இருப்பா... பாய் சொல்லிட்டு போறாங்க.
ஷ்யாம் மனக்குரல்(ம.கு) : அந்த பொண்ணு நல்லா பொண்ணுனு வேற சொல்றா... அந்த பொண்ணுகிட்ட மட்டும் தா இவனுக்கு அப்டி தோன்னுதுனு சொல்றா... அப்டினா அந்த பொண்ண இவனுக்கு கல்யாணம் பண்ணிகளாமே... அப்றம் ஏதோ யோசிச்சு... டேய்ய் ஷாமு. .நீ ரொம்ப யோசிக்காத.....அவன்கிட்ட இத பத்தி பேசுனா நீ தான் காலி....
கார்த்தி ஹாஸ்டலுக்கு பக்கத்திலிருந்து நீனாவ பிக் பண்றார்... நீனா கோபமா இருக்கற மாறி பேசாம வெடிகை பாத்துட்டு வர்றாங்க.
கார்த்தி : ஓய் கோவாமா?
நீனா : ஆமா...
கார்த்தி : மன்னிச்சிடு டி... கெளம்பும்போது அந்த எருமா ஷ்யாம் கேள்வி மேல கேள்வி கேட்டு சாகடிச்சிட்டா... அதா லேட்...
நீனா : மன்னிக்கணும் நா எனக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடு...
கார்த்தி : சரி... கொடுத்துட்டா போச்சு... சொல்லி கார் ஓட்டராங்க.
தொடரும்