(மாயா சொல்றதைக் கேட்டு ஆதி,ஷியாம் மற்றும் சிந்து தீவிரமா யோசிக்கிறாங்க🤔).
சிந்து - எனக்கும் மாயா சொல்லறமாதிரி இருக்குமோனு சந்தேகமா இருக்கு... எப்படி தெரிஞ்சிக்கிறது🤔?
ஆதி - நான் பாத்துக்கிறேன்.. அவளை பத்தின உண்மை தெரிஞ்சே ஆகனும்.
(அடுத்து புருஷ் அகிலா ரூமில்!!! பாரு அங்க அமைதியா உட்கார்ந்துட்டு இருக்காங்க.... அருண் ஐஷு அங்க ஸோஃபால உட்கார்ந்துட்டு இருக்காங்க... அப்போ அங்க அகிலா, புருஷ் வறாங்க🚶🏻♀️🚶🏼♂️.. அருண்& ஐஷு எழுந்து நிக்கிறாங்க... அங்க அகிலாவும் மற்றும் புருஷும் அவளோட இரண்டு பக்கமும் அமர்ந்து அவளோட தலையக் கோதி விட்டுட்டு இருக்காங்க,...)
அகிலா - பாரு!!!! அழு டா .. எனக்கு உன்ன பார்த்தா பயமா இருக்கு டா.. உன் மனசில் இருக்கிற அத்தனையும் அழுது முடிச்சிடு டா😭😱... ஆனா பாரு எந்த அசைவும் இல்லாம இருக்கா😶....
புருஷ் - ஐஷு.. நீ போய் பட்டம்மாள் கிட்ட பாருக்கு சாப்பாடு வாங்கிட்டு வா..(பாரு அப்போ தான் பேசுனா🗣️)
பாரு - எனக்கு வேண்டாம்🙅🏼♀️... நான் போறேன்!!!
புருஷ் - என்னது போறியா ?எங்க போகப் போற?நீ எதுக்கு போகனும்... நீ எங்கையும் போக வேண்டாம்.... இங்கையே இரு...
பாரு - வேண்டாம் பா.. நான் போறேன்.. அவருக்கு என்னப் பிடிக்கவில்லை... கடவுள் எனக்கு மட்டும் இப்படிச் சோதனைகள் தரு
ருகிறார்னு தான் தெரியவில்லை... எனக்கு நீங்க நிறைய உதவி பண்ணிட்டீங்க ... எனக்கு ஒரு புது வாழ்க்கையைக் கொடுத்திருக்கீங்க... ஆனா நான் சந்தோஷமா இருக்கிறது அந்த கடவுளுக்கே பொறுக்காதுப் போல... நா... நா... என் அப்பா, அம்மாகிட்டையே போறேன்.....
(அகிலா & புருஷ் அதிர்ந்துப் போறாங்க😳😲)
அகிலா - என்ன மா இப்படி எல்லாம் பேசுற? சாக நினைக்கிற அளவுக்கு எதுவும் நடக்கவில்லை டா.. நான் ஆதிக்கிட்ட பேசுறேன் மா... நீ கவலைப்படாதே...
பாரு - மா.... பா... என்ன நடந்தாலும் நீங்க எனக்காக அவரை கஷ்டப்படுத்தவோ இல்லை என்ன பத்திப் புரியவைக்க முயற்சி பண்ணவோ கூடாது அப்படினு சத்தியம் பண்ணுங்க😷...
அகிலா - மாட்டேன்🙅🏼♀️.. நான் அவன் கிட்ட பேசத்தான் போறேன்..
பாரு - அப்படின்னா அடுத்த நொடி நான் உயிரோடு இருக்க மாட்டேன்
(அகிலா,புருஷ், அருண், ஐஷு எல்லாரும் அதிர்ந்து போறாங்க😳)
புருஷ் - என்ன பேசிற நீ?
பாரு - அவருக்கு என்னப் பத்தி தெரிஞ்சா என்ன கஷ்டப்படுத்தினத நினைச்சு கஷ்டப்படுவாங்க... அவர் முகத்தில் என்னைக்கும் நான் சிரிப்பு மட்டும் தான் பார்க்கனும்.. (அகிலா அவளைக் கட்டிப் பிடிச்சு அழறாங்க .... ஆனா அப்பவும் பாரு கண்ணில் இருந்து கண்ணீர் வரலை... அது எல்லோருக்கும் பயத்த வர வைக்குது😱)
புருஷ் - சரி நீ கொஞ்ச நேரம் தூங்கு வா😴.
பாரு - வேண்டாம் எனக்கு தூக்கம் வரல பா.
அகிலா - அம்மா உன்ன தூங்க வைக்கிறேன் டா!! (ஆனா பாரு வரல)
(அகிலா கீழே போய் ஒரு கிலாஸ்(glass) பால் எடுத்து வந்து பாருக்கு கொடுக்கிறாங்க🥛.. பாரு குடிக்கலை .. ஆனா வறுப்புருத்திக் குடிக்க வைக்கிறாங்க... கொஞ்ச நேரத்தில் அவள் தூங்கிட்டா😴😴.. அவ தூங்கினதை உறுதிப் பண்ணிட்டு..
அகிலா - என்னங்க .. நீங்க கொஞ்சம் டாக்டர்கு (Doctor)🩺 ஃபோன் (phone)செய்து வரச் சொல்லுங்க ... இப்படியே விட்டா செறி வராது.
ஐஷு - ஆமா ஆன்டி(aunty)அவ அழாம இருக்கிறது ரொம்ப தப்பு.
அருண் - நான் போய் டாக்டர அழைச்சிட்டு வரவா?
புருஷ் - நானே கால் பண்றேன் அருண்☎️.
அருண் - சரி பா... (புருஷ் டாக்டர்கு கால் பண்றாங்க📞.)
( 15 நிமிடம் கழித்து டாக்டர் வீட்டுக்கு வாங்க... மாடில இருந்து இதை ஆதி பார்க்கிறார்..)
ஆதி ம.கு - டாக்டர் என்ன இந்த நேரத்தில் இங்க வந்திருக்காங்க? போய் பாப்போம்னு அறையை விட்டு வெளிய வராங்க.... (அதுக்குள்ள டாக்டர் அகிலா, புருஷ் அறைக்குள்ளே போறாங்க ... ஆதி பின்னாடியே போய் வெளிய நின்று கொண்டு பார்க்கிறார்... அங்க பாரு பெட்டுல(bedla) படுத்திருக்காள்..🛌🏼
அகிலா - டாக்டர் அவளுக்கு தூக்க மாத்திரைக் கொடுத்து தான் தூங்க வச்சிருக்கேன்... இன்னைக்கு முழுசா சாப்பிடவும் இல்லை தூங்கவும் இல்லை.... முகம் ஒரு மாதிரியா தான் இருந்தது... எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை... அழாம எதுவும் பண்ணாம ஒரு பொம்மை மாதிரி தான் இருந்தாள்.. அப்படியே தான் பேசினாள்.... அவளோட கஷ்டத்தை வெளிய காட்டிகவே இல்லை.... அவள் இப்படி இருந்தா முன்னாடி மாதிரி எதாவது ஆகிடுமோனு பயமா இருக்கு டாக்டர்....
டாக்டர் - இருங்க பார்த்திட்டு சொல்றேன்.... (அவர் அவளுடைய உடல்நிலையை பாத்திட்டு🌡️💉.... ) மேம்(mam) சந்தோஷமான விஷியம்தான் இருந்தாலும் இந்து சூழ்நிலைக்கு அது சந்தோஷமான செய்தியா செல்லலாமா இல்ல கஷ்டச் செய்தியாச் சொல்லலாமானு தான் தெரியவில்லை... பார்வதி கர்ப்பமாக🤰🏻இருக்காங்க.... (அப்படியே ஆதி அதிர்ந்துப் போறார்😳மற்றவர்கள் எல்லாம் ரொம்ப சந்தோஷமா ஆகிறாங்க😆.)
டாக்டர் - ஆனா அவங்க உடல் அளவிலையும் மனதளவுலையும் ரொம்ப சோர்ந்துப் போய் இருக்காங்க உங்களுக்கே தெரியும் அவளோட கடந்தகால மனநிலை.... அவங்க அப்படியே இருந்தா அது அவங்களுக்கும் அவங்க குழந்தைக்கும் ஆபத்து...இந்த விஷயம் தெரிஞ்சா அவ மனம் கொஞ்சம் பாதிப்பு அடைய வாய்ப்பு இருக்கு.... மனசு கொஞ்சு மாறி கொஞ்சம் பழைய நிலைக்கு மாறவும் வாய்ப்பு இருக்கு😇... அதனால் நான் என்ன நினைக்கிறேன்னா அவளுக்கு தெரிய வருவதறக்கு முன்பே இந்த கருவக் கலைச்சிடலாம்னு எனக்கு தோன்றுகிறது..அது தான் அவளுக்கு நல்லதுனும் தோன்றுது இந்த மாதிரி நேரதில் ஒரு வாய்ப்பு எடுக்கிறது ரொம்ப ஆபத்து.... (எல்லோரும் ரொம்ப வருத்தமா ஆகுறாங்க😞.... ஆதிக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு😱😳)
ஆதி ம.கு - என்னது கர்ப்பமாக இருக்கிறாளா 🤯(அவருக்கு அவங்க ஒன்னா இருந்த இனிப்பான தருணங்கள் எல்லாம் அவர் கண் முன்னாடி வந்துட்டு போகுது ஒரு நிமிடம்🙂...) கடவுளே!!!! நான் செய்யறது பெரிய பாவம்... என் குழந்தையை சுமக்கிறவளை போய்... நான்... வேண்டாம்... இந்த விவாகரத்து வேண்டாம்... அப்படி பண்ணா அது பெரிய தப்பு... அவ சுமக்கிறது என் குழந்தை 🤰🏻👼🏻.
டாக்டர் - நீங்க யோசிச்சு சொல்லுங்க🤔... ஆனால் ரொம்ப தாமதம் ஆக்காதிங்க ... ஏன்னா ஒரு பொண்ணு அவளுக்குள்ள ஒரு உயிர் இருக்கிறது அவளால உணர முடியும்... அதுக்குள்ள இத நம்ம பண்ணும்.
ஆதி ம. கு.- என் குழந்தையை கலைக்கப் போறாங்க உடனே ஆதி உள்ள சென்று சத்தமா - நான் அனுமதிக்க மாட்டேன் 🙅🏼♀️... நான் பாத்துக்கிறேன் அவளை..... அவளுக்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகாமல் நான் பார்த்துக்கிறேன்.... என் குழந்தை எனக்கு வேணும்... அவள் மனநிலை எப்படி இருந்தாலும் நான் அவளை நல்லா பார்த்துக்கிறேன் ....மா ....பா.... சத்தியமா நான் பார்த்துக்கிறேன்... இனிமேல் அவளை நான் கஷ்டப்படுத்த மாட்டேன் மா.... நான் பண்ண தவறுக்கு எல்லோரும் என்ன மன்னிச்சிடுங்க சொல்லும் போதே அவர் கண்ணுல கண்ணீர் வருகிறது😭எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு😊.
டாக்டர்- ஆதி அவங்க நிலைமை ரொம்ப மோசமா இருக்கு
ஆதி-அதுக்கு காரணம் நான் தான் டாக்டர்😔...... அதை என்னால தான் சரி செய்ய முடியும்.... நான் சரி பண்றேன்..... அவளுக்கும் எங்க குழந்தைக்கும் எதுவும் ஆகாது.. நான் ஆகவும் விட மாட்டேன்.
டாக்டர்- சரி ஆதி... உன்னை நம்பி நான் இந்த விஷியத்தை இங்கையே விடறேன்... கவனமா பார்த்துக்கோங்க ... நான் இப்ப ஊசி போட்டு இருக்கேன்💉... காலையில் எழுந்ததும் நல்லா சாப்பிட வைங்க🍲.. நல்லா பார்த்துக்கோ... எதுவா இருந்தாலும் என்ன கூப்பிடுங்க📞.
புருஷ்- சரி, டாக்டர்.. அருண்.. டாக்டர அனுப்பிட்டு வா🚶🏻♀️.
அருண் - சரி பா... (டாக்டர் போனதும்)
ஆதி- அப்பா, அம்மா இவள் யாரு? இவளுக்கு என்ன பிரச்சனை ? இது எதுவும் நான் இதுவரைக்கும் கேட்கவில்லை... கேட்கவும் தோன்றவில்லை.... கல்யாணம் ஆனதில் இருந்து கொஞ்சம் நாள் முன்னாடி வரைக்கும் சந்தோஷமாக தான் இருந்தேன்..... ஆனா????🤔🤔🤔🤔
(அடுத்த நாள் காலை, ஆதி அழுத்துக்கிட்டே : அப்பா!!!! அவளை காணவில்லை பா😢🥺😭💔 .)
தொடரும்.......